மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய மனதில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் தேவையற்ற பிரச்சனைகளில் மூக்கை நுழைக்க வேண்டாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு செய்யும் வேலையில் அக்கறை அதிகரிக்கும். உண்மை எது என்று தெரியாமல் அவசர முடிவுகள் வேண்டாம்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுக்கு சவால் நிறைந்த நாளாக இருக்கப் போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் தேவையற்ற கடன்கள் வாங்குவதை தவிர்க்கவும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். உங்கள் மீது சுமத்தப்பட்ட வீண் வழிகள் மறையும் வழிகள் பிறக்கும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய மனம் நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. உங்களுக்கு பிடித்தவர்கள் மூலம் சுப செய்திகளை பெறலாம். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் தேவையற்ற வாக்குவாதங்களில் வெளியிடங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நிறைவேறாத ஆசைகள் நிறைவேற கூடிய அமைப்பு உண்டு.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்பத்தில் அமைதி நிலவும். மனதில் ஒரு புதிய நம்பிக்கை பிறக்கும் இனிய நாளாக இருக்கப் போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பண விஷயத்தில் கவனம் தேவை. உங்களை மற்றவர்கள் ஏமாற்றுவதற்கு வாய்ப்புகள் உண்டு எனவே எச்சரிக்கை உணர்வு தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலை பளு அதிகரித்து காணப்படும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய பொழுதை உபயோகம் உள்ளதாக கழிப்பது ரொம்பவும் நல்லது. புதிய நண்பர்களின் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு விருத்தி ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய மனப்போராட்டங்கள் குறைய ஆரம்பிக்கும். எது நடக்க வேண்டும் என்று நினைத்தீர்களோ, அது நடக்கப் போகிறது. சுபகாரிய தடைகள் விலகி நல்ல விஷயங்கள் நடக்கும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை ஓங்/கும். சுய தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்கள் உதவி செய்வார்கள்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சிந்தனை தெளிவாக இருக்க வேண்டியது அவசியமாகும். பேசும் பேச்சில் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத பொருட் சேர்க்கை ஏற்படும். கணவன் மனைவி இடையே புதிய புரிதல் ஏற்படும். ஆரோக்கியம் சீராகும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய எதிர்பார்ப்புகள் பூர்த்தி அடையக்கூடிய இனிய நாளாக இருக்கப் போகிறது. நீங்கள் செய்ய நினைக்கும் விஷயத்தை தள்ளிப் போடாமல் செய்து விடுவது நல்லது. சுய தொழிலில் இருப்பவர்களுக்கு ஏற்றும் தரக்கூடிய அமைப்பாக இருக்கிறது. உத்தியோகஸ்தர்கள் வெளியிட பயணங்களின் பொழுது உடைமை மீது கவனம் செலுத்துவது நல்லது.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய பொறுப்பு உணர்ந்து செயல்படுவது நல்லது. தேவையற்ற வாக்குவாதங்கள் தேவையற்ற மன உளைச்சலை கொடுக்கும். குடும்பத்தில் அமைதி நிலவ அனுசரித்து செல்லுங்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய யுத்திகள் நல்ல பலன் கொடுக்கப் போகிறது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிலும் வெற்றி காணக்கூடிய அமைப்பாக இருக்கிறது.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சிந்தனை எதிர்மறையாக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் உண்டு. தேவையற்ற எண்ணங்களை தூக்கி எறிந்து விடுங்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வருவது வரட்டும் என்கிற மனப்போக்கு இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள சவாலான பணிகளையும் எளிதாக செய்து முடித்து பாராட்டு வாங்குவார்கள்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குழப்பங்கள் அதிகரித்து காணப்படும். உங்களுடன் இருப்பவர்களே உங்களுக்கு துரோகம் செய்வதற்கு வாய்ப்புகள் உண்டு. எவரையும் நம்பாமல் இருப்பது நல்லது. சுய தொழிலில் ஏற்றம் தரக்கூடிய அமைப்பாக இருந்தாலும் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு கூடுதல் பொறுமை தேவை. ஆரோக்கியம் மேம்படும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தேவையற்ற அலைச்சல் ஏற்படலாம் கவனம் தேவை. முன்கூட்டியே திட்டமிட்டு எந்த ஒரு செயலையும் செய்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கடைசி நேர பரபரப்பு எரிச்சலை உண்டாக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் தங்கள் பலவீனம் அறிந்து செயல்படுவது நல்லது. கணவன் மனைவிக்குள் இருக்கும் நெருக்கம் கூடும்.