பாதுகாப்பான பறவைகளில் ஒன்றான (plum heeded parakeet ) என்ற வகையைச் சேர்ந்த கிளியொன்றை, வனஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரிகள் மாத்தளை களுதாவளை பிரதேசத்தில் மீட்டெடுத்துள்ளனர்.
கிடைத்த தகவலுக்கு அமைய, கடந்த 9ஆம் திகதியன்று அவ்வீட்டை சுற்றிவளைத்த அதிகாரிகள், கிளியை மறைத்து வைத்திருந்தவரையும் கைது செய்துள்ளனர்.
கைதான சந்தேகநபரை மாத்தளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் மாத்தளை மாவட்டத்தில் இவ்வாறான கிளியொன்றை முதல் தடவையாக தாங்கள் மீட்டெடுத்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்