“தேசிய எதிர்ப்பு தினம்” (ஜாதிக விரோத தினய) இன்று இலங்கையின் பல்வேறு பகுதிகளில் அரசாங்கத்திற்கு எதிரான பல போராட்டங்கள் நடத்தப்பட்டது.
கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் சிவில் ஆர்வலர்கள் மற்றும் பல சாதாரண பிரஜைகளின் பங்குபற்றுதலுடன் இன்றைய பிரதான போராட்டம் நடைபெற்றது.
எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகயா (SJB) இன்று “தேசிய எதிர்ப்பு தினத்தை” குறிக்கும் வகையில் நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டம் நடத்தியது.
எனினும், கடந்த அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களுடன் ஒப்பிடுகையில் இன்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற போராட்டங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இல்லை என கூறப்படுகின்றது.