பீடாதிபதி நாயக்கர்களுக்கும் ஜனாதிபக்குமிடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
அரசியலமைப்புச் சட்டத்தின் ஊடாக நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் சரியானதை தொடர்ந்தும் செய்வேன் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பீடாதிபதி நாயகர்களுக்கு அக் கூட்டத்தில் உறுதியளித்தார்.
நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் எனவும் தனக்கு எந்தவகையிலான பின்னடைவு வருனிம் தாம் சட்டத்தை அமுல்படுத்துவதில் இருந்து பின்வாங்கப்போவதில்லை எனவும் தெரிவித்தார்.
நிகாயாக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்துவதுடன் அரசியலமைப்பிற்கும் பீடங்களுக்குமான உறவை தாம் மேலும் வலுபடுத்தும் முயற்சிகளை மேற்கொள்வேன் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) அவர்கள் தெரிவித்துள்ளார்.