நாட்டில் இருளுக்கு சாபமிடுவதைவிட, ஒரு விளக்கையாவது ஏற்றுவது , நாட்டுக்காக நான் ஆற்றும் கடமை என நினைத்தேன் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் தலைமையில் இன்று ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில் நிகழ்வை , ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அதனால்தான் நாட்டு நெருக்கடியில் உள்ளபோதும் சவாலை ஏற்றேன் என்று தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாட்டை மீட்டெடுக்க ஒன்றிணைவோம் என அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.
எனவே அனைவரையும் , சர்வக்கட்சி அரசியல் இணையுமாறு அழைப்பு விடுக்கின்றேன் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமங்க இதன்போது தெரிவித்தார்.