மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலம் தரும் அமைப்பாக இருக்கிறது. ஆற்றல் பெருகும் என்பதால் நினைத்ததை முடித்து காட்டுவீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பொருளாதாரம் ஏற்ற இறக்கத்துடன் இருக்கக்கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் வருமானம் அதிகரிக்க கூடுதல் முயற்சி செய்வீர்கள்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் விரும்பிய விஷயங்களை அடைவதில் சில தடைகள் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிரிகளின் தொல்லை அதிகரிக்கும் என்பதால் எல்லா விஷயங்களிலும் கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நேர பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டு.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மிகுதியான மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நல்ல செய்திகள் கேட்கக் கூடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு லாபம் பெருகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளிடம் பகைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. ஆரோக்கிய பாதிப்புகளை கவனியுங்கள்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் எவ்வளவு இடையூறுகள் வந்தாலும் துணிச்சலோடு நின்று போராடுவீர்கள். குடும்பத்தில் தீர்க்க முடியாத பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்கக்கூடிய அற்புதமான நாளாகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் பொறுமையான சிந்திப்பது நல்லது.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சிறு சிறு கோப தாபங்களையும் வெளியில் காட்டாமல் புன்னகை பூத்த முகத்தோடு காணப்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பண தேவை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் சக பணியாளர்களுடன் நெருங்கி பழகுவீர்கள். ஆரோக்கியம் மேம்படும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கற்பனை கோட்டை கூடுதல் வழுபெற வாய்ப்புகள் உண்டு. எந்த ஒரு விஷயத்திலும் நேர்முறையாக சிந்திப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பண ரீதியான விஷயத்தில் கவனம் தேவை. உங்களுடன் இருப்பவர்களே உங்களை ஏமாற்றக்கூடும். ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக இருக்க போகிறது. உங்கள் நீண்ட நாள் ஆசை ஒன்று நிறைவேற கூடிய வழி கையிலேயே இருக்கும். எதையும் பெரிதாக சிந்திப்பது நல்லது. தேவையற்ற விஷயங்களை இன்றோடு மூட்டை கட்டி வைப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் வெற்றியின் முதல் படியை நோக்கி பயணிப்பீர்கள். ஆரோக்கியத்தை கவனியுங்கள்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் துணிச்சலுடன் எதையும் எதிர்கொள்ளுங்கள். வருவது வரட்டும் என்கிற மன போக்கு நன்மை தரும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மந்த நிலை காணப்பட்டாலும் கூடுதல் ஒத்துழைப்பு கொடுப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நியாயத்தை உரக்கச் சொல்லும் வாய்ப்பு கிடைக்கும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தடைபட்ட காரியங்கள் முடிவுக்கு வரும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தேவையான விஷயங்களை செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணி சுமை கூடும். வியாபாரத்தில் உள்ளவர்கள் அதை விருத்தி செய்வதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். புதிய புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் அதிகரிக்கும். ஆரோக்கியம் மேம்படும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மனக்கட்டுப்பாடோடு இருப்பது நல்லது. தேவையற்ற விஷயங்களை மனதை அலைபாய விடாதீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் புதிய பொறுப்புகள் கூடும் என்பதால் கூடுதல் உத்வேகத்துடன் செயல்பட முயற்சிப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நினைத்ததை அடையும் வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியம் முன்னேற்றம் காணும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்ப விஷயங்களில் மற்றவர்களை ஈடுபடுத்தாமல் இருப்பது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே விரிசல் விழாமல் பார்த்துக் கொள்ள அனுசரித்து செல்லுங்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வருமானம் பெருகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளிடம் பாராட்டு வாங்கும் வாய்ப்புகள் உண்டு.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சுமூகமான நாளாக காணப்பட போகிறது. குடும்பத்தில் அமைதி நிலவும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய போட்டியாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் உங்களுடைய திறனையும் அதிகரிப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதுப்பொலிவு உண்டாகும். மூத்த சகோதரர்கள் இடத்தில் கவனம் செலுத்துங்கள். ஆரோக்கியம் மேம்படும்.