நாடாளுமன்றத்தில் சபை முதல்வர் பதவி, அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுக்கு வழங்கப்பட்டமை தொடர்பில் மொட்டு கட்சி எம்.பியான பவித்ரா வன்னியாராச்சி கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கூட்டமொன்று மஹிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெற்றது. இதன்போது கட்சியில் மூத்த உறுப்பினர்கள் இருக்கின்றனர், எங்களுக்கு அமைச்சு பதவிகூட வழங்கப்படவில்லை ஆனால் சுசில் பிரேமஜயந்தவுக்கு அமைச்சு பதவி மட்டுமல்ல சபை முதல்வர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.
இது எந்த வகையில் நியாயம் என கடும் சீற்றத்தை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் பவித்ராவின் இந்த கருத்துக்கு சில எம்.பிக்கள் ஆதரவு வழங்கியுள்ளனர்.
அதுமட்டுமல்லாது சுசில் பிரேமஜயந்த மொட்டு கட்சியையும், ஆட்சியையும் விமர்சித்தவர், நாம் மௌனம் காத்தோம். கட்சிக்காக கதைத்தோம். ஆனால் இப்போது ஓரங்கட்டப்படுகின்றோம் எனவும் அவர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளியிட்டதாகவும் கூறப்படுகின்றது.