நீர்கொழும்பு – கொழும்பு பஸ்ஸில் பயணித்த பெண் ஒருவரிடம் 15 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையடித்த நபர் வத்தளை நகர பகுதியிலுள்ள கால்வாய் ஒன்றில் குதித்து தப்பிச் செல்லவிருந்த நிலையில் பணத்துடன் வத்தளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சந்தேக நபர், பஸ்ஸில் பயணித்த பெண்ணிடம் பணத்தை கொள்ளையடித்த பின்னர் வத்தளை பிரதேசத்தில் உள்ள கால்வாய் ஒன்றில் குதித்தபோது அந்தப் பகுதியில் கடமையிலிருந்த பொலிஸார் இதனை அவதானித்து உடனடியாக அவரைக் கைது செய்துள்ளனர்.
இதன்போது சந்தேக நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் அவர் பஸ்ஸில் பயணித்த பெண் ஒருவரின் 15 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றமை தெரிய வந்துள்ளது.
மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மொரட்டுவ பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.