அவசரகாலச் சட்டம் தொடர்பான பிரகடனம் இன்று நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
இதன்படி பிரகடனத்திற்கு ஆதரவாக 120 வாக்குகள் வழங்கப்பட்டன.
அதேசமயம் பிரகடனத்திற்கு எதிராக 63 வாக்குகள் வழங்கப்பட்டுள்ளன.
அரச ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவசரகாலச் சட்ட பிரகடனத்திற்கு ஆதரவாகவும், ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பிரகடனத்திற்கு எதிராகவும் வாக்களித்துள்ளன.
இலங்கையில் ஏற்பட்ட கடுமையான அரசியல் நெருக்கடி நிலை காரணமாக தற்போதைய ஜனாதிபதி பதில் ஜனாதிபதியாக பதவியேற்ற போது அவசரகாலச் சட்டத்தை நாட்டில் நடைமுறைப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.