அம்பாறை-கல்முனை மாநகரில் சமையல் எரிவாயு விநியோகத்தில் அரசியல் தலையீடுகள் இருப்பதனால் முறைகேடுகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, மக்கள் பிரதிநிதிகள் தலையிட்டு அவர்களின் ஆதரவாளர்களுக்கு மற்றும் குடும்பத்தினருக்கு எரிவாயுiவ வழங்கி வருவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் தேவையுடைய மக்களுக்கு எரிவாயு கிடைப்பதில் இடர்பாடுகள் இருப்பதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.
கல்முனை மாநகர பிரதேசங்களில் மாநகர சபை உறுப்பினர்கள் பலர் தலையிட்டு சமையல் எரிபொருளுக்கான டோக்கன்களை வழங்கி அவர்களுக்கு சமையல் எரிவாயுவை பெற்றுக்கொடுக்கின்றனர்.
இந்த வாய்ப்பானது அவர்கள் கட்சி சார்ந்தவர்களுக்கு மட்டுமே கிடைக்கின்றது. அதிலும் சிலர் தனது நெருங்கிய குடும்பத்தினர், தீவிர ஆதரவாளர்களுக்கு முன்னுரிமை வழங்கி பங்கிடுவதனால் பொதுமக்களுக்கு சமையல் எரிவாயு கிடைப்பதில் சிக்கல்கள் நிலவுகின்றது.
இந்த விடயம் தொடர்பில் கல்முனை பிரதேச செயலாளர் அரசியல்வாதிகள் பொறுப்புவாய்ந்த அரச அதிகாரியாக செயற்பட்டு தேவையுடைய மக்களுக்கு சமையல் எரிவாயுவை பெற்றுக்கொடுக்க ஆவண செய்யுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.