இலங்கையில் தங்கத்தின் விலை கடந்த 2 வாரங்களுடன் ஒப்பிடும் போது இன்று சுமார் 10,000 ரூபா குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, 24 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 175,250 ரூபாயாக பதிவாகி உள்ளதுடன் 22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 160,700 ரூபாயாகவும் உள்ளது.
மேலும் , 21 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை ரூபாய் 153,400 ஆகவும் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அதேவேளை அமெரிக்க டொலரின் விற்பனை விலை இன்று சற்று அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது