நாடாளுமன்ற பெரும்பான்மையினை கொண்டுள்ள பொதுஜன பெரமுன கட்சி பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தாம் ஆதரவு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பினை பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகல காரியவசம் வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையினை கொண்டுள்ள கட்சியின் ஆதரவுடனேயே ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிகளை தெரிவு செய்ய முடியும்.
இந்நிலையில் பொதுஜன பெரமுன ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவினை அறிவித்துள்ள நிலையில் தற்போதைய சூழ்நிலை அவருக்கு சாதகமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.