பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் பாதுகாப்பு அமைச்சின் கடமைகள் மற்றும் செயற்பாடுகள் திருத்தியமைக்கப்பட்டு, விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் முன்னாள் அமைச்சர் வர்த்தகர்- தம்மிக பெரேராவின் கீழ் இருந்த பல திணைக்களங்கள் பதில் ஜனாதிபதியின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
ஏற்கனவே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால், முதலீட்டு ஊக்குவிப்புத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட தம்மிக்க பெரேராவுக்கு ரத்னாலங்கா பாதுகாப்பு நிறுவனம், முதலீட்டுச்சபை மற்றும் துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழு ஆகியவற்றின் பொறுப்புக்கள் வழங்கப்பட்டன.
எனினும் அந்த பொறுப்புக்கள் அனைத்தும் பதில் ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் தற்போது கொண்டு வரப்பட்டுள்ளன.