இலங்கையில் நாளைய தினம் (12) தேசிய துக்க நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அன்றைய தினம் அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக உள்விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேசமயம் நாளைய தினம் பொது விடுமுறை அல்ல எனவும் அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்ஷோ அபேயின் (Shinzo Abe) திடீர் மரணம் காரணமாக இலங்கையில் இவ்வாறு துக்க தினம் அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்ஷோ அபே (Shinzo Abe) மக்கள் மத்தியில் உரையாற்றிக்கொண்டிருக்கையில் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.