கொழும்பில் இன்று அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் கடும் தீவிரமடைத்துள்ள நிலையில், ஜனாதிபதி மளிகை மற்றும் ஜனாதிபதி செயலகம் என்பன பொதுமக்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.
இந்நிலையில் அவ்விரு இடங்களிலும் எங்கு தேடியும் கோட்டாபய இருக்கவில்லை என கூறப்படுகின்றது.
மக்களின் போராட்டத்தால் அங்கிருந்து அவசராவசரமாக வெளியேறிய கோட்டாபய முப்படை தலைமயத்தில் தஞ்சமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேசமயம் கோட்டாபய வெளியேறியதாக கூறப்படும் பாதுகாப்பு படையினரின் வாகனங்கள் அதிவேகமாக செல்லும் காணொளிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.