லிட்ரோ நிறுவனத்தை இன்று கோப் குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
நாடாளுமன்ற தொடர்பால் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை எதிர்வரும் 6 ஆம் திகதி கோப் குழுவில் முன்னிலையாகுமாறு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சுக்கு அரச கணக்குகள் தொடர்பான குழுவில் இன்றைய தினம் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு அரச நிதி தொடர்பான குழுவில் இன்று முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.