இலங்கை கடற் பரப்பிற்குள் எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 12 பேர் ஓர் படகுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து நேற்று மாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தற்போது மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் நோக்கி கொண்டு வரப்படுகின்றது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்கள் இன்று காலை பருத்தித்துறை நீதிமன்றில் ஆயர் செய்யப்படவுள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்டது IND-PY-PK-MM-898 இலக்க படகு எனத் தெரியவருகின்றது

