மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக இருக்கப் போகிறது. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் ஊடல்கள் நீங்கி ஒற்றுமை நீடிக்கும். சுயதொழியில் உள்ளவர்கள் சமயோகித புத்தியுடன் செயல்பட்டால் அனுகூல பலன் பெறலாம். உத்தியோகஸ்தர்களுக்கு எண்ணியது ஈடேரும் இனிய நாளாக இருக்கிறது. பொறுமை காத்தால் வேண்டியது கிடைக்கும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சுகம் தரும் நாளாக அமைய இருக்கிறது. நீங்கள் நினைத்ததை சாதிக்கக்கூடிய வாய்ப்புகளை பெறுவீர்கள். சுய தொழிலில் குரோதம் தவிர்த்து ஆரோக்கியமான போட்டியில் இறங்குவது உத்தமம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஊக்கம் கிடைக்கும். சுயமரியாதையை தக்க வைத்துக் கொள்வது நல்லது.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் விவேகத்துடன் செயல்படக்கூடிய அற்புதமான நாளாக அமையப் போகிறது. சுதந்திர காற்றை சுவாசிக்க கூடும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சிரமமான விஷயமும் சுலபமாக முடியும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வெற்றி அடையக்கூடிய பாதைகள் திறக்கும். பயணங்கள் அனுகூல பலன் தரும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் வாயை திறக்காமல் இருப்பது நல்லது. தேவையான விஷயத்திற்கு மட்டும் பேசுங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத கடன் பிரச்சனை வரக்கூடும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உற்சாகம் தரும் இனிய நாளாக இருக்கிறது. பகையை மறப்பது நல்லது.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை அடைய போராட வேண்டி இருக்கும். சாதாரண விஷயம் கூட கஷ்டப்பட்டு பெற வேண்டி இருக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்க கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக பணியாளர்கள் மத்தியில் பாராட்டுகள் கிடைக்கும். உங்களுடைய திறமையை நிரூபித்து காட்டுங்கள். ஆரோக்கியம் சீராகும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சிந்தனை சிறப்பாக இருக்கக்கூடும். புதிய வாய்ப்புகளை பெறுவீர்கள். கணவன் மனைவி இடையே தேவையற்ற வாக்குவாதங்கள் தவிர்க்க வேண்டும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வருமானம் உயரக்கூடிய அமைப்பு என்பதால் தைரியமாக முடிவு எடுக்கலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிலும் ஆர்வம் அதிகரிக்கும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இதுவரை இருந்து வந்த சிக்கல்கள் தீரக்கூடிய அற்புதமான அமைப்பாக இருக்கிறது. முக்கிய முடிவுகளை எடுப்பதில் காலதாமதம் வேண்டாம். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு புதிய யுக்திகளை கையாளும் வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் வருமானம் உயரக்கூடிய அமைப்பு என்பதால் கூடுதல் பொறுப்புணர்வுடன் செயல்படுங்கள்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இதுவரை இருந்து வந்த எதிர்ப்புகள் மாறும். கணவன் மனைவி இடையே இருக்கும் மனக்கசப்புகள் தீரும். குடும்பத்தில் பெரியவர்களுடைய ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு புகழ் பெறக்கூடிய அமைப்பு என்பதால் நேர்மறையாக சிந்திப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நட்பு வட்டம் பிரியும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய முயற்சிகளுக்கு பல தடைகள் ஏற்படலாம் என்பதால் நிதானம் தேவை. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு திடீர் யோகம் உண்டாகும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு முன் கோபம் தேவையில்லாத சங்கடங்களை ஏற்படுத்திவிடும் என்பதால் பொறுமையுடன் இருப்பது நல்லது. ஆரோக்கிய பாதிப்புகளை உடனுக்குடன் கவனியுங்கள்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சகிப்புத்தன்மை அதிகரிக்க கூடிய நாளாக இருக்கிறது. மற்றவர்கள் உங்களை தவறாக புரிந்து கொள்ளக்கூடும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு போட்டிகள் வலுவாகும் என்பதால் கூடுதல் ஒத்துழைப்பு தேவை. பங்குதாரர்களுடன் இருந்து வந்த சண்டைகள் நீங்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு முயற்சி திருவினையாக்கும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வீண் விரயங்கள் ஏற்படக்கூடும் என்பதால் திட்டமிட்டு செலவு செய்வது நல்லது. கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் விரிசலை உண்டாக்கி விடும் என்பதால் பேச்சில் இனிமை தேவை. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பல சோதனைகள் வரக்கூடும் தயாராக இருங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வெளியிட பயணங்களில் கவனம் தேவை.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருப்பதால் எதிலும் வெற்றி வாகை சூட இருக்கிறீர்கள். வெளியூர் தொடர்பான விஷயங்களில் சாதக பலன் கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்க பெறுவீர்கள். சுயதொழியில் உள்ளவர்களுக்கு இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு அமையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அரசு வழி காரியங்களில் அனுகூல பலன் உண்டாகும். ஆரோக்கியத்தில் எச்சரிக்கை தேவை.