கொழும்பு கோட்டை பகுதியில் பொதுமக்களுக்கும் வாகனங்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையிலான ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக நீதிமன்ற உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கொழும்பு கோட்டை பிரதேசத்தில் இன்று (30) பிற்பகல் 3 மணி முதல் 6 மணி வரையில் இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுவதை தடுக்கும் வகையில் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது.