மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலமான நல்ல பலன்கள் கிடைக்க கூடிய வகையில் அமைப்பு உண்டு. தொலை தூர இடங்களிலிருந்து சுப செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மற்றவர்களுடைய ஒத்துழைப்பு கிடைக்கும். உத்யோகஸ்தர்கள் கொடுத்த வேலைகளை சரியாக செய்து முடித்து பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய நாள் நன்றாக அமையப் பெறும். புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு உங்கள் உரிமைகளை நிலைநாட்டக் கூடிய சூழ்நிலை உண்டாகும். பிள்ளைகளின் கல்வி தொடர்பான விஷயத்தில் எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்ப்புகள் மறையும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய பழைய நினைவுகளை அசை போட்டுப் பார்க்க கூடிய அமைப்பு உண்டு. நண்பர்கள் வட்டம் விரிவடையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் எவரையும் நம்பி வாக்கு கொடுக்காமல் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு இழப்புகள் ஏற்படலாம் எனவே பொறுமை தேவை. கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் தீட்டிய திட்டங்கள் யாவும் நிறைவேறக்கூடிய நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். தேவையற்ற கடன் வாங்குவதை தவிர்க்கவும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேற்று மதத்தினரின் ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முயற்சி செய்வீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவு பெருகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் எதிர்பார்த்ததை விட லாபம் பெற கூடிய அமைப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நிர்வாகத் திறமை அதிகரித்து கொள்ள கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். போட்டிகள் எண்ணிக்கை குறையும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய பிடிவாத குணத்தை மாற்றிக் கொள்வது நல்லது. தேவையற்ற இடங்களில் வாக்குவாதங்கள் தவிர்த்து பொறுமை காப்பது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கும் மந்த நிலை காணப்பட்டாலும், பெரிதாக இருக்கும் பிரச்சனைகள் நீங்கும். உத்தியோகஸ்தர்களுக்கு தன்னம்பிக்கையை அதிகரிக்க கூடிய நல்ல நாளாக இருக்கிறது.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய தேவைகள் யாவும் பூர்த்தியாகும் கூடிய நல்ல நாளாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிக்கும் துணிச்சல் உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவை பெறுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு தடைகளைத் தாண்டிய வெற்றி கிடைக்க கூடிய இனிய நாளாக இருக்கிறது.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய விடா முயற்சி வெற்றியை கொடுக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய நட்புகள் வளரும். கணவன் மனைவி இடையே ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத இடங்களிலிருந்து பண வரவு கிடைக்க இருக்கிறது. அரோகியம் படிப்படியாக முன்னேற்றம் அடையும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய தேவையற்ற எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது. எதிர்பாராத இடங்களிலிருந்து இழப்புகள் ஏற்படலாம் என்பதால் நிதானத்தை தவறவிடாமல் இருப்பது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை கொடுக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் எடுத்த முடிவுகளில் இருந்து பின் வாங்காமல் இருப்பது நல்லது.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும் என்பதால் குடும்ப தேவைகளை எளிதாக பூர்த்தி செய்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வசதி வாய்ப்புகள் பெருகும். உங்களுக்கு கீழ் பணிபுரிபவர்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தடைகளைத் தாண்டிய ஏற்றம் காணப்படுகிறது. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் நெருக்கம் வலுவாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு உங்களுக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைப்பதில்லை இடையூறுகள் ஏற்படலாம். அரசு வழி காரியங்களில் பொறுமை தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு நினைத்ததை அடையும் வாய்ப்புகள் உண்டு.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களை எதிர்த்துப் போட்டியிடும் பலரும் தோற்றுப் போகக் கூடிய நல்ல நாளாக இருக்கிறது. எதிலும் வெற்றி காண கூடிய அமைப்பு என்பதால் தடைப்பட்ட சுப காரியங்களில் ஈடுபடலாம். கணவன் மனைவி இடையே இருக்கும் தேவையற்ற பேச்சை தவிர்த்துக் கொள்ளுங்கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த விஷயங்களில் கூடுதல் அக்கறை கொள்வது நல்லது.