எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொதுமக்களைத் தாக்கும் பொலிஸாருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொலிஸ்மா அதிபரிடம், எதிர்க்கட்சியினர் முறைப்பாடு செய்துள்ளனர்.
பொலிஸாரின் கடமை பொதுமக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதும் பாதுகாப்பதும் ஆகும். இந்நிலையில் மாறாக பொலிஸார் இன்று அரசியல் தலைவர்களைப் பாதுகாப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
நேற்று முறைப்பாட்டைச் சமர்ப்பித்ததன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அதோடு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களைக் கைது செய்யவும், கருத்து வேறுபாடுகளை அடக்கவும் திட்டமிட்ட முயற்சி நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
எனவே அரசியல் தலைவர்கள் மற்றும் அவர்களின் அதிகார வரம்புக்கு அப்பாற்பட்ட அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரல்களை செயற்படுத்தும் பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சிகள் பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளன.