எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாதவர்களுக்கு தொலைபேசி அழைப்புக்கள் ஊடாக வீடுகளுக்கே எரிபொருளை கொண்டு வரக்கூடிய வகையிலான வர்த்தகம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
லங்கா ஐ.ஓ.சியினால் 50க்கும் மேற்பட்ட பெற்றோல் மற்றும் டீசல் அடங்கிய கொள்கலன்கள் நேற்றைய தினம் விநியோகிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் நேற்று முன்தினமும் 23 கொள்கலன்களில் பெற்றோல் மற்றும் டீசல் விநியோகிக்கப்பட்டதாக லங்கா ஐ.ஓ.சி தெரிவித்துள்ளது.
இதேவேளை, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் பெற்றுக்கொள்ள முடியாத தற்போதைய சூழ்நிலையில், மற்றுமொரு எரிபொருள் வர்த்தகம் தொடர்பான தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
தொலைபேசி அழைப்புக்கள் ஊடாக வீடுகளுக்கே எரிபொருளை கொண்டு வரக்கூடிய வகையிலான வர்த்தகம் ஒன்று இடம்பெறுவதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் யூ.எஸ்.எஸ் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அவ்வாறு வழங்கப்படும் எரிபொருட்களின் தரம் தொடர்பில் தற்போது பிரச்சினை ஏற்பட்டுள்ளது. எனவே அந்த சட்டவிரோத வர்த்தகம் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுவமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.