களுத்துறை பகுதியில் உள்ள விகாரை ஒன்றில் பூக்கள் விற்று தனது மகனை தாய் ஒருவர் கிரிக்கெட் வீரனாக்கிய நிகழ்வு பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் குறித்த வீரர் இன்று இலங்கை கிரிக்கெட் அணியில் மட்டுமல்லாது கிரிக்கெட் அரங்கில் முழு உலகையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.
யார் அந்த நட்சத்திர வீரர்?
அவர் வேறு யாரும் இல்லை, தற்போது இலங்கையில் இடம்பெற்று வரும் அஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 137 ஓட்டங்களை எடுத்து நட்சத்திர வீரராக ஜொலித்த பதுங்க நிசங்கவே (Pathum Nissanka) அந்த வீரர் அவர்.
இவர் 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தனது முதலாவது பன்னாட்டுப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக விளையாடியுள்ளார்.