காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுவரும் “கோட்டா கோ கம” எதிர்ப்பாளர்கள் 19 பேர், இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளளதாக கூறப்படுகின்றது.
ஜனாதிபதி செயலக வாயில்களை மறைத்து, உள்ளே செல்லவிடாது தடுத்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் , பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிறந்த தினத்தை கருப்பு தினமாக அனுஸ்டிக்க போராட்டக்காரர்கள் தயாராகி வரும் நிலையில்,பெருமளவானோர் நேற்று நள்ளிரவு பேராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று கொழும்பின் முக்கிய பகுதியில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டுளமை குறிப்பிடத்தக்கது.