தாய் ஒருவர் தனது மகனுக்கு இறைச்சியில் விஷம் கொடுத்து கொலை செய்துள்ள சம்பவம் ஒன்று நேற்று மாலிம்படை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கந்தஹேன, அல்கிரிய, தெலிஜ்ஜவில பகுதியைச் சேர்ந்த 9 வயதான சிறுவனே சம்பவத்தில் உயிரிழந்தவர் ஆவார்.
வீட்டிலிருந்த 3 வயதான குழந்தையும் 9 வயதான மகனும் அழும் சத்தம் கேட்டு பக்கத்தலிருந்து வந்த உறவினர் ஒருவர் குறித்த வீட்டுக்குச் சென்று பரா்த்தபோது இந்தச் சம்பவம் தொடர்பில் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து உடனடியாக சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் குழந்தையின் தாய் வீட்டிலிருந்து தலைமறைவாகியுள்ள நிலையில், பொலிசார் தாயாரை தேடும் ம்பணில்யில் ஈடுபட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்