உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.
இந்நிலையில் உலக சந்தையில் இன்று தங்கம் ஒரு அவுன்ஸ் இலங்கை ரூபாவின் படி 664,910 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இலங்கையில் கடந்த இரு தினங்களை விட இன்று தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் இன்றைய தங்க நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 187,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 172,050 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன், நேற்றையதினம் (16) 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 170,900 ரூபாவாகவும், நேற்று முன்தினம்(15) 169,700 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது.
மேலும், 21 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை இன்றையதினம் 164,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.
தங்கம், மிகப்பெரிய சொத்தாக மதிக்கப்படுகிறது. ஒருசில நேரங்களில் அது பொருளாதார பாதுகாப்பையும் தருகிறது. நிதி நெருக்கடியின் போது தங்கத்தை விற்று பணமாக்கி கொள்ளவும் முடியும்.