யாழ்.பல்கலைகழக முன்றலில் இன்று காலை 8 மணியளவில் பல்கலைக்கழக புகுமுக மாணவியின் மீது அசிட் வீசப்போவதாக அச்சுறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பல்கலைக்கழக புகுமுக மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு யாழ்.பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெற்றுவருகின்றது. இந்நிலையில் நிகழ்வுக்காக வந்திருந்த மாணவி ஒருவரை வழிமறித்த NP VP 4490 என்ற இலக்கத்தை உடைய மோட்டார் சைக்கிளில் வந்திருந்த நபர் , மாணவி மீது அசிட் வீசப்போவதாக அச்சுறுத்தியுள்ளார்.
சம்பவத்தை அவதானித்த அவ்வழியாக வந்த பல்கலைக்கழக மாணவர்கள் மாணவியை பல்கலைக்கழகத்திற்குள் அனுப்பிவிட்டு சம்மந்தப்பட்ட இளைஞரிடம் சென்று விசாரித்துள்ளனர்.
இதன்போது குறித்த இளைளஞர் உரும்பிராய் பகுதியை சேர்ந்தவர் எனவும் அவருடைய கையில் இருந்தது அசிட் போத்தல் அல்ல அது வெறும் தண்ணீர் என்பதும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சம்பவம் தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு தெரியப்படுத்திய மாணவர்கள் இளைஞரை எச்சரித்து அனுப்பியதாகவும் தெரியவருகின்றது.