யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் உள்ள மருத்துவர் ஒருவரின் வீடு உடைக்கப்பட்டு 8 பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தெல்லிப்பழை மருத்துவமனையில் சேவையாற்றும் மருத்துவரொருவரின் வீட்டிலேயே இந்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவ தினத்தன்று வீட்டில் எவரும் இருக்கவில்லை என்றும், கோப்பாய் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் சம்பவம் தொட்ர்பிலான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்