கடந்த 7 நாட்களாக கெரவலப்பிட்டிய – தல்தியாவத்த கடலில் நங்கூரமிட்டிருந்த எரிவாயு கப்பலுக்கு கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறித்த கப்பலுக்கு 3.9 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் கப்பலுக்கு செலுத்தப்பட்டதாக லிட்ரோ நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
அதேசமயம் கடந்த 7 ஆம் திகதி நாட்டை வந்தடைந்த குறித்த கப்பலுக்கு தாமதக் கட்டணமாக சுமார் 2 கோடி ரூபா பணமும் செலுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாளை முதல் மீண்டும் சந்தைக்கு எரிவாயு விநியோகிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.