மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய பலன்களை தரக்கூடிய அமைப்பாக இருக்கிறது. இதுவரை தடைப்பட்டுக் கொண்டிருந்த சில விஷயங்கள் அதுவாகவே முடிவுக்கு வரப்போகிறது. சுய தொழிலில் லாபத்தை அதிகரிக்க புதிய யுத்திகளை கையாளுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு உயரதிகாரிகளின் ஆதரவு தேவை எனவே இணக்கமாக செல்வது நல்லது.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேறும். அரசு வழி காரியங்களில் அனுகூல பலன் கிடைக்கும். கணவன் மனைவி இடையே புரிதல் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நினைத்த விஷயங்களை சட்டென்று பேசவிடாமல் பொறுமையாக சிந்தித்து பேசுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் அதிக அக்கறை தேவை.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு எதிர்மறையாக சில விஷயங்கள் நடக்கக் கூடும் என்பதால் தேவையற்ற எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது. எது வந்தாலும் நன்மைக்கே என்று ஏற்றுக் கொள்ளுங்கள். சுய தொழிலில் லாபம் காண கூடுதல் ஒத்துழைப்பு கொடுப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக போட்டியாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் கணிசமாக உயரும். நீங்கள் தொட்டதெல்லாம் வெற்றியாக கூடிய நல்ல அமைப்பு உண்டு எனவே தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் மீண்டும் ஈடுபடுவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கூடுதல் பணி சுமை உடல் சோர்வை ஏற்படுத்தக்கூடும் கவனம் தேவை.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தேவையற்ற வீண் விரயங்கள் ஏற்படலாம். பொருட்சேதம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் விலை உயர்ந்த பொருட்களை கையாளுவதில் கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நெடிய பயணங்கள் அனுகூல பலன் கொடுக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் அதிகரித்து காணப்படும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கடமையில் கூடுதல் கவனம் தேவை. பொறுப்பில்லாமல் நடந்து கொண்டால் தேவையற்ற இழப்புகளை சந்திப்பீர்கள். கணவன் மனைவி உறவில் விரிசல் விழாமல் இருக்க அனுசரணையாக இருப்பது நல்லது. புதிய தொழில் துவங்கும் எண்ணம் மேலோங்கி காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத பயணங்கள் அனுகூல பலன் கொடுக்கும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் சற்றும் எதிர்பாராத சம்பவங்களை சந்திக்க இருக்கிறீர்கள். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் சில மனக்கசப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தொல்லை கொடுத்து வந்த எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு சக பணியாளர் ஆதரவு கொடுப்பார்கள்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதுக்கும் ஒவ்வொரு முடிவிலும் கவனமாக இருப்பது நல்லது. தேவையற்ற எதிர்பார்ப்புகள் உங்களுக்கு ஏமாற்றத்தை கொடுக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பொறுமை தேவை. தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். உத்தியோகஸ்தர்களுக்கு படையில் கூடுதல் மதிப்பு உண்டாகும். ஆரோக்கியம் மேம்படும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய முடிவுகளிலிருந்து பின் வாங்காமல் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத இடங்களிலிருந்து சுபச் செய்திகள் கிடைக்கப் பெறும். பிள்ளைகளின் எதிர்கால நலன் குறித்த கவலை மேலோங்கி காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நினைத்ததை சாதித்துக் காட்டும் வல்லமை உண்டாகும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் கவனமுடன் இருக்க வேண்டும். உங்களுடன் இருந்து கொண்டே உங்களுக்கு எதிராக சிலர் செயல்படக் கூடும். மறைமுக எதிரிகளின் தொல்லை வலுவாகும் என்பதால் விழிப்புணர்வுடன் செயலாற்றுவது நல்லது. புதிய தொழிலில் திடீர் திருப்பம் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தொலைதூர நண்பர்களின் ஆதரவு கிடைக்கப் போகிறது.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய விடாப்பிடியான முயற்சிகளை தளர்ந்து விடாமல் பார்த்துக் கொள்வது நல்லது. எதிர்பாராத சோர்வு உற்சாகத்தை சீர்குலைக்கும். கணவன் மனைவி இடையே இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு பொறுமை தேவை.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய நீண்ட நாள் வேண்டுதல்கள் நிறைவேறும். நடக்காது என்று நினைத்தது நடக்கப் போகிறது. ஆரோக்கிய ரீதியான சிறுசிறு பாதிப்புகளை உடனுக்குடன் கவனித்து கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சூழ்ச்சிகள் அதிகம் பின்னப்பட்டு இருக்கும் எனவே சமயோஜித புத்தி தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வருமானம் பெருகும்.