நாகசேனை சிங்கள வித்தியாலயத்துக்கு அருகிலிருந்து, 6 மாத சிசுவொன்றில் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலேயே இச்சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பிரதேசவ்காசிகள் கொடுத்த தகவலை அடிப்படையில் சிசுவின் சடல் மீட்கப்பட்டுள்ளதுடன், இறந்த சிசு யாருடையது என்பது தொடர்பான தகவல் இதுவரை தெரியவில்லை .
இந்நிலையில் சிசுவின் சடலம் நுவரெலியா மாவட்ட நீதவான் விசாரணையின் பின்னர் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்ததுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் வீதியில் சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளமை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.