யாழில் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் சுற்றிவளைக்கப்பட்டு சோதனை இடம் பெற்றுள்ளது.
யாழ். மாவட்டத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில், எரிபொருளை விற்பனை செய்யாது சேமித்து வைத்திருத்தல் போன்ற குற்றச்சாட்டுக்கள் பொதுமக்களால் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாண மாவட்ட செயலரின் பணிப்புரையின் கீழ் யாழ்ப்பாண மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை யினரால் இன்று யாழ் குடாநாட்டில் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.
யாழ் மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை இணப்பாளர் விஜிதரன் அவர்களின் நெறிப்படுத்தலில் யாழ் குடாநாட்டில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள், எரிபொருள் விற்பனை நிலையங்களின் எரிபொருள் கொள்கலன்களும் கண்காணிக்கப்பட்டது