கொழும்பு வர்த்தக உயர் நீதிமன்றத்தின் பிஸ்கல் அதிகாரி தனது உத்தியோகபூர்வ கடமைகளை மீறியதற்காக பதவி நீக்கப்பட்டுள்ளார்.
ரஷ்ய ஏரோஃப்ளோட் ஏர்பஸ் ஏ 330-300 விமானத்தை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தடுத்து வைப்பதற்கான நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தியதன் ஊடாக உத்தியோகபூர்வ கடமைகளை மீறியதாக குறித்த அதிகாரி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சகம் குறித்த அதிகாரியை பணி இடைநீக்கம் செய்துள்ளது.