பிரித்தானியாவின் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் (Queen Elizabeth II) பிளாட்டினம் ஜூபிலி அணி வகுப்பில் இலங்கை முப்படைகளின் குழு ஒன்று கலந்துகொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விழா மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் (Queen Elizabeth II) 70 ஆண்டுகால சிம்மாசன ஆட்சிப் பொறுப்பை குறிக்கும் வகையில் நடத்தப்பட்டுள்ளது. அதன்படி ஜூன் 02 முதல் 05 வரை நடைபெற்ற கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இந்த அணி வகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டது .
அணி வகுப்புநிறைவடைந்ததும், இலங்கை இராணுவக் குழு பிரித்தானியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு விஜயம் செய்ததாக கூறப்படுகின்றது.
அத்துடன், முப்படையினர் இந்த அணி வகுப்பில் பங்குபற்றியமைக்காக இலங்கை உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேன (Saroja Sirisena) நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த முக்கியமான நிகழ்வில் இலங்கைக் கொடி உயரமாகப் பறந்ததைக் கண்டு பெருமையடைவதாக இலங்கை உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.