நெருக்கடியான இந்த காலக்கட்டத்தில் இலங்கைக்கு உருளைக்கிழங்கை வழங்கலாம் என்று பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.
பிராந்திய ஒத்துழைப்புக்கான சார்க் அமைப்பின் செயலாளர் எசல ருவான் வீரகோன், பங்களாதேஷ் பிரதமர் இல்லாமான, கணபாபனில் வைத்து, ஹசீனாவை சந்தித்தபோதே இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுநோய் மற்றும் உக்ரைன்-ரஷ்யா போரைத் தொடர்ந்து உலகளாவிய உணவுப் பிரச்சினைக்கு மத்தியில் அதிக உணவுகளை பொருட்களை பயிரிட பங்களாதேஷ் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அத்துடன் பங்காளதேசத்தின் ஆராய்ச்சியாளர்கள் வறட்சியைத் தாங்கும் அரிசி வகைகளை உருவாக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றும் ஷேக் ஹசீனா கூறினார்.
இந்தநிலையில் அரிசி உற்பத்தி 50% குறைந்துள்ளதால் இலங்கைக்கு தற்போது உரம் தேவைப்படுவதாக வீரக்கோன் சுட்டிக்காட்டினார்.
இதற்கு பதிலளித்த ஹசீனா, இந்தப் பிராந்தியத்தில் உள்ள நாடுகள் ஒத்துழைப்புடன் செயற்பட்டால், பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ளமுடியும் என்று தெரிவித்தார்.