சிங்கராஜ வனத்திற்குள் சென்ற பெண்ணொருவர் கடந்த 3 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக சூரியகந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரத்தினபுரி கொலன்ன சூரியகந்த ஹிமிதிரி பிரதேசத்தின் ஊடாக குறித்த பெண் வனத்திற்குள் சென்றுள்ளார்.
சிங்கராஜ வனத்தில் இயற்கையாக விளைந்துள்ள ஏலக்காய்களை பறிப்பதற்காக சென்றே 45 வயதான பெண்ணே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
இவ்வாறு காணாமல் போன பெண் சூரியகந்த ஜீ.ஜீ.பிரிவில் வசித்து வந்த மூன்று பிள்ளைகளின் தாய் என தெரியவந்துள்ளது.
இந்த பெண் தனது கணவன் மற்றும் மகனுடன் வனத்திற்குள் சென்று ஏலக்காய் பறித்துக்கொண்டு நடந்து சென்ற போது பாதை மாறி சென்றுள்ளதாக பொலிஸில் அன்றைய தினம் செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முறைப்பாட்டை அடுத்து சில பொலிஸ் குழுக்கள், பிரதேச மக்களுடன் இணைந்து தேடுதலில் ஈடுபட்ட போதிலும் பெண்ணை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனையடுத்து குருவிட்ட இராணுவ முகாம் அதிகாரிகளிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய 20 பேர் அடங்கிய இராணுவத்தினருடன் இணைந்து தற்போது பொலிஸார், காணாமல் போன பெண்ணை தேடி வருகின்றனர்.