கிளிநொச்சியில் விசேடஅதிரடிப்படையினர் முற்றுகையில் பெரும் தொகை ஆபத்தான பொருட்கள் சிக்கியுள்ளன.
கிளிநொச்சி விவேகானந்தநகரில் உள்ள வீடு ஒன்றில் நேற்று (03) மாலை 6 மணியளவில் விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைத்து தேடுதல் மேற்கொண்டபோதே அவற்றை கைப்பற்றியுள்ளனர்.
இதன் போது 208 கேரள கஞ்சா, சொகுசு வாகனம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன் சம்பவம் தொடர்பில் மன்னாரைச் சேர்ந்த சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதேவேளை நேற்றையதினம் யாழ்ப்பாணம் மண்கும்பான் பகுதியிலும் பெரும்தொகை கஞ்சா விசேடஅதிரடிப்படையினரால் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.