திரபனை பகுதியில் உள்ள பாடசாலையொன்றின் ஆசிரியர் ஓய்வறையில் வைத்து சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகத்தின் பேரில் இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான இராணுவ வீரர் 24 வயதுடையர் என பொலிஸார் தெரிவித்தனர். பாடசாலை ஆசிரியரின் ஓய்வறையில் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாக சிறுமி தனது தாயிடம் கூறியதை அடுத்து , சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் பாடசாலை நேரத்தின் பின்னர் சந்தேக நபர் சிறுமியை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.