இலங்கையில் தற்போது கிடைக்கப்பெறும் எரிபொருளின் கையிருப்பு தொடர்பான விபரத்தை எரிசக்தி அமைச்சு வெளியிட்டுள்ளது.
இன்று காலை 08.30 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் கையிருப்பு தொடர்பில் அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதன்படி எரிபொருள் கையிருப்பு பின்வருமாறு:
டீசல் – 18,825 MT
சூப்பர் டீசல் – 42 MT
92 பெட்ரோல் – 33,498 MT
95 பெட்ரோல் – 13,067 MT
JET A1 – 386 MT
மேலும் டீசல் இறக்கும் பணி தற்போது நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார் .
அத்துடன் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமும் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது