சவுதி அரேபியாவில் தண்டனைகள் வழங்கப்படுவதைப் போன்ற கொடூர தண்டனைகள், நம் நாட்டிலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார். அட்டுலுகம சிறுமியின் நிலைமைக்கு காரணமான கயவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இதற்காக சவுதியில் போன்று, நம் நாட்டிலும் சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார். மேலும் இச் சிறுமியின் பேரிழப்பே இந்த அவலங்களுக்கு முற்றுப்புள்ளியாக இருக்கட்டும் எனவும் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.