மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்ப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும் என்பதால் நிதானத்துடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகளுக்கு இடம் கொடுக்காமல் சகித்துக் கொள்வது நல்லது. சுய தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணியில் அக்கறை அதிகரிக்கும். உஷ்ணம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும் கவனம் தேவை.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்தது அப்படியே நடக்கும் என்பதால் மகிழ்ச்சிக்கு பஞ்சமிருக்காது. குடும்பத்தில் ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. சுயதொழிலில் உள்ளவர்கள் உங்களுடைய திறமையை மேலும் மெருகேற்றிக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் பணியில் விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. சுவாச பிரச்சனைகள் மேலோங்கி காணப்படும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிலும் ஆர்வத்துடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவி உறவுக்கு இடையே இருக்கக்கூடிய மனக்கசப்புகள் தீரும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு நினைத்த காரியத்தில் தடை, தாமதங்கள் ஏற்படலாம் எனவே நிதானம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தேவையற்ற சினம், மன இறுக்கத்தை ஏற்படுத்தும் எனவே பொறுமையுடன் செயல்படுவது நல்லது. ஆரோக்கியம் சீராகும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய மனதில் இருக்கும் பக்தி அதிகரிக்கும். இறைவழிபாட்டின் மீது ஆர்வம் உண்டாகும். குடும்பத்தில் அமைதி நிலவும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு மறதி ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் பண விஷயத்தில் விழிப்புணர்வுடன் செயல்படுவது அவசியமாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புகள் கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பணிவு தேவை. தலை கனத்துடன் செயல்பட்டால் உங்களுக்கு இழப்புகள் ஏற்படலாம் என்பதால் கவனம் தேவை. குடும்பத்தில் பெரியவர்களின் பேச்சைக் கேட்டு நடப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு நினைத்தது நடக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் திடீர் பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் உண்டு. கணவன் மனைவி இடையே மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. கண் தொடர்பான பிரச்சினைகள் இருப்போர் உடனுக்குடன் சரி செய்வது நல்லது.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய உறுதியான குணத்தை மேலும் செம்மை படுத்துவீர்கள். முன் வைத்த காலை பின் வைக்காமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் எடுத்த முடிவுகளில் சாதக பலன் பெறலாம். சுய தொழிலில் உள்ளவர்கள் உங்களுடைய உழைப்பை கூடுதலாக கொடுக்க வேண்டி இருக்கும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் கூடுதல் சுறுசுறுப்பு தேவை. தலைபாரம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் துணிவுடன் செயல்பட வேண்டிய நாளாக இருக்கிறது. குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்களுக்கு தீர்வை பெறுவீர்கள். சுய தொழிலில் உள்ளவர்கள் சோர்வுடன் காணப்படுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மனக் கவலை அகலும். எதிர்காலம் பற்றிய திட்டமிடல் சரியாக அமையும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். ஆரோக்யம் சீராக ஓய்வு தேவை.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு எனவே சிக்கனத்துடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் பெரியவர்கள் ஆசீர்வாதம் கிடைக்கும். சுய தொழிலில் உள்ளவர்கள் பல விமர்சனங்களை தாண்டிய முன்னேற்றத்தை பெறுவீர்கள். எதையும் பொருட்படுத்தாமல் உங்கள் லட்சியத்தை நோக்கி பயணியுங்கள். உத்தியோகஸ்தர்களுக்கு அனுகூல பலன் உண்டு. நரம்புகள் தொடர்பான பிரச்சினைகளை கவனியுங்கள்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய முயற்சியை கை விடாமல் இருப்பது நல்லது. மனதில் இருக்கும் ஒருவிதமான அச்ச உணர்வு நீங்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு ஏமாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பகைவர்களும் நண்பர்களாக மாற வாய்ப்புகள் அமையும். சுவாச பிரச்சினைகள் ஏற்படும் என்பதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சேவை மற்றவர்களுக்கு தேவையாக இருக்கக்கூடும். சமுதாய அக்கறையுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பெற்றோர்களுடைய ஆதரவு தேவை. தேவையற்ற வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு புகழ் போதை இருக்கக் கூடாது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்ப்புகள் வலுவாகும். மன உளைச்சல் அதிகரிக்கும் என்பதால் தியானம் மேற்கொள்வது நல்லது.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் இனிய நாளாக இருக்கிறது. சுபகாரிய முயற்சிகளில் ஈடுபடும் வாய்ப்பு உண்டு. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு செலவுக்கு ஏற்ப வரவுகளும் அதிகரிக்கும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் சுபச்செய்தி பெறுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதில் இருந்து வந்த தடைகள் அகலும். உடல் சோர்வு அதிகரிக்கும் என்பதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய அமைதி பல நன்மைகளை கொடுக்கக்கூடியதாக இருக்கும். குடும்பத்தில் பொறுப்புகளை அதிகம் சுமக்க வேண்டியிருக்கும். கணவன் மனைவி இடையே தேவை அறிந்து நடந்து கொள்வது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்கள் வேதத்தை காட்டிலும் விவேகத்தை கடைபிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தொட்டதெல்லாம் துலங்கும் என்பதால் வெற்றி வாய்ப்புகள் அதிகரித்து காணப்படும். ஆரோக்கியம் முன்னேற்றம் காணலாம்.