மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். கணவன் மனைவி இடையே இருக்கும் பிணக்குகள் தீரும். ஆனால் சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கடினமான வேலையையும் எளிதாக முடியக்கூடும். உத்தியோகஸ்தர்களுக்கு பல்வேறு எதிர்ப்புகள் வலுவாக கூடும் என்பதால் தன்னம்பிக்கையை அதிகரித்து கொள்வது நல்லது.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது. முன்பின் தெரியாதவர்களின் அறிமுகத்தை தவிருங்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கவனம் தேவை, உங்கள் உடனிருப்பவர்களே உங்களுக்கு எதிராக பணிபுரிவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு சகிப்புத் தன்மை தேவை.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களை சுற்றி சூழ்ச்சிகள் பின்னிப் பிணைக்கப்பட்டு இருக்கும். எதையும் எதிர் கொள்வதற்கான தன்னம்பிக்கை தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு துணிச்சல் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு நெருங்கியவர்களின் உதவி கிடைக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சிந்தனை எதிர்மறையாக செயல்படக் கூடும் என்பதால் கவனமுடன் இருப்பது நல்லது. தொலை தூர பிரயாணங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்ப்புகள் மறையும். உத்தியோகஸ்தர்களுக்கு பொறுமை தேவை. முன்கோபம் பேரிழப்பை ஏற்படுத்தும் என்பதால் நிதானம் காப்பது நல்லது.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய பொறுமைக்கு பல சோதனைகள் வரலாம் எனினும் அமைதி காப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கடின உழைப்பால் உயரக் கூடிய நாடாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் பழைய கடன் பிரச்சனைகளை முடிக்கக் கூடிய வாய்ப்புகளை பெறுவீர்கள். ஆரோக்கியம் மேம்படும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய உதவியை மற்றவர்கள் கேட்க கூடும் என்பதால் பெருந்தன்மையுடன் செயல்படுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கடமை உணர்வு அதிகரிக்கும். கூட்டுத்தொழிலில் லாபம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் குடும்பத்தில் பிடிவாதத்தை தளர்த்திக் கொள்வது நல்லது. மன உளைச்சல் குறையும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய பொறுப்புகள் உணர்ந்து செயல்படுவது நல்லது. குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து கொள்ளுங்கள். கணவன் மனைவி இடையே மரியாதை அதிகரிப்பது நல்லது. சுய தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடத்திலிருந்து நற்செய்தி கிடைக்கும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கனவுகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தடைப்பட்ட வேலைகள் நிறைவேறும். நீண்டநாள் வேண்டுதல்கள் பலிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உங்களுடைய திறமைகளை நிரூபிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்பத்தில் அமைதிக்கு பஞ்சம் இருக்காது. சகோதர, சகோதரர்களுக்கு இடையே ஒற்றுமை நீடிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணியில் கவனம் தேவை. ஆடம்பரப் பொருட்களை கையாளும் பொழுது எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய சலுகைகள் கிடைக்கும். ஆரோக்கியம் சீராகும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சொந்த முயற்சியில் நற்பலன்கள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ளக் கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே இருக்கக்கூடிய மனக் கசப்புகளை பேசி தீர்த்துக் கொள்வீர்கள்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்பத்தில் குதூகலம் காணப்படும். உற்றார், உறவினர்களின் ஆதரவு பெருகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு உங்களுடைய கை ஓங்கி இருக்கக் கூடிய அமைப்பு உண்டு. உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களிடம் தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு திடீர் அதிர்ஷ்ட யோகம் வரும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய முயற்சிகளுக்கு வெற்றிகள் கிடைக்கும் இனிய நாளாக இருக்கிறது. தொலை தூர பயணங்களில் அனுகூல பலன் உண்டு. தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவியிடையே அன்பு அதிகரிக்கும். சுய தொழிலில் ஏற்றம் காண்பார்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைப்பதில்லை இடையூறுகள் ஏற்படலாம்.