தகாத உறவால் புத்தளம் வண்ணாத்திவில்லு பகுதியில் 50 வயதுடைய பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த பெண் கள்ளக்கணவருடன் 4 வருடங்கள் வாழ்ந்து வந்ததாகவும், இருவருக்கும் இடையில் இடம்பெற்ற தகராறு காரணமாக பெண் வீட்டை விட்டு சென்றுள்ளார்.
இதன்பின்னர் ஒருகிழமைக்குப் பின்னர் நேற்றுமாலை வீட்டிற்கு வந்தமையின் காரணத்தினால் ஆத்திரமடைந்த கள்ளக்கணவர், பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் வண்ணாத்திவில்லு மங்களபுர 15 ஆம் கட்டைப் பகுதியில் வசித்து வந்த 50 வயதுடைய லலிதா பெரேரா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் பெண்ணின் கள்ளக் கணவர் கைது செய்யப்பட்டுள்ள மேலதிக விசாரணைகளை வண்ணாத்திவில்லு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.