க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த தனது மகளை வல்லுறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் பொலிஸ் சார்ஜென்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் நிலையமொன்றில் கடமையாற்றும் , கம்பளை வெவதென்ன பிரதேசத்தைச் சேர்ந்த உத்தியோகஸ்தரே இவ்வாறு கைதாகியுள்ளார். சம்பவம் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டை அடுத்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர்.
இதன் போது, வீட்டில் தனியாக இருந்த மகளின் அறைக்கு இரவு நேரத்தில் சென்ற தந்தை ,மகளை வல்லுறவுக்க ட்படுத்தியதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
அதேவேளை சந்தேகநபர் மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக மனைவி அம்பாறை பிரதேசத்தில் உள்ள தமது வீட்டுக்கு சென்றிருந்த வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.