அத்தியாவசியமான ஊழியர்களை மாத்திரம் பணிக்கு அழைக்கும் அதிகாரத்தை திணைக்களத் தலைவர்களுக்கு வழங்கி புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட உள்ளதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த சுற்றறிக்கை வெளியிடப்படும் என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார்.
அதேசமயம் , இந்த சுற்றறிக்கை பரீட்சைகள் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு பொருந்தாது என்றும் அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி குறிப்பிட்டுள்ளார்.