பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் இன்று பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஜகத் அல்விஸ் தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத்திடம் கையளித்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட காரணங்களின் அடிப்படையில், அல்விஸ் செயலாளர் பதவியில் இருந்து விலகியதாக, ஜனாதிபதியின் செயலாளருக்கு அறிவித்துள்ளார் எனவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.
புதிய பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சராக டிரான் அலஸ் பதவியேற்றுள்ள நிலையில் ஜகத் அல்விஸ் பதவி விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.