பாகிஸ்தானில் ஏற்பட்ட விமான விபத்தில் 98 பேர் உயிரிழந்த நிலையில், அந்த விபத்தில் உயிர் தப்பிய நபர் அச்சம்பவத்தை அவரே பகிர்ந்துள்ளார்.
இதன்போது அவர் தெரிவிக்கையில், தனக்கு கிடைத்த ஆசனத்தைத் தான் மாற்றிகொண்டமையாலேயே இன்று உயிர் பிழைத்துள்ளதாகக் கூறியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பாகிஸ்தான் சர்வதேச விமானச்சேவையின் விமானம் ஒன்று 2020 மே மாதம் திடீரென்று ஏற்பட்ட கோளாறு காரணமாகக் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொருங்கியது.
குறித்த விமானத்தின் இரண்டு இயந்திரங்களும் பழுதாக, ஜின்னா சர்வதேச விமான நிலையத்தில் மூன்று முறை வட்டமிட்டு, இறுதியில் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொருங்கியது.
இவ்விமான விபத்தில் 98 பேர் கொல்லப்பட்ட நிலையில் இருவர் மட்டுமே அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அதில் ஒருவர் ஜாபர் மசூத் ஆவார்.
விமான பயணத்தில் ஜன்னலோர இருக்கை அனுமதிக்கப்பட்டும், அவர் வாசலின் அருகாமையில் உள்ள இருக்கையை மாற்றிக்கொண்டுள்ளார்.
ஜாபரினுடைய இருக்கையை எடுத்துக் கொண்டவர் துரதிர்ஷ்டவசமாக விபத்தில் கொல்லப்பட, ஜாபர் லேசான காயங்களுடன் தப்பியுள்ளார்.
விமானம் விழுந்து நொருங்கிய பொழுது, ஜாபர் மசூத் அமர்ந்திருந்த இருக்கை தூக்கி வெளியே வீசப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு கார் மீது விமான இருக்கையுடன் ஜாபர் மசூத் சென்று விழுந்துள்ளார்.
விமான விபத்தில் உயிர் தப்பிய ஒரே நபர்: தனது இறுதி நேர முடிவு தொடர்பில் அவர் வெளியிட்ட தகவல்கள்
இதில் கார் சேதமடைந்தபோதும் ஜாபர் மசூத் உயிருடன் இருப்பதைப் பொதுமக்கள் அறிந்து, உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையிலேயே அவர் உயிர் தப்பியுள்ளார்.
தனது இருக்கையை சக பயணி ஒருவருடன் மாற்றிக்கொள்ள முடிவு செய்த அந்த நிமிடமே தமக்கு மறக்க முடியாத தருணம் என ஜாபர் மசூத் தனது கடைசி நிமிட அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.