புதிய அமைச்சரவையில் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்பது கட்சி கொள்கைகளுக்கு எதிரானது என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று மேலும் 9 அமைச்சரவை அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றனர்.
இதில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நிமல் சிறிபால டி சில்வா துறைமுகம், கப்பற்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சராக பதவியேற்றிருந்தார்.
புதிய அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பதுடன், புதிய அமைச்சரவையில் எந்தவொரு அமைச்சுப் பதவிகளையும் ஏற்காதிருக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் செயற்குழு கூட்டத்தில் அண்மையில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் அமைச்சரவை அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்றது கட்சி கொள்கைக்கு முரணானது என கட்சித் தலைவர் மைத்ரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.