மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் கவனத்துடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வெளியிட பயணங்கள் மூலம் அனுகூல பலன்கள் உண்டு. உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் நேர்வழியில் செல்வது நல்லது.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை சாதித்துக் காட்ட கூடிய நல்ல நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் திருப்பங்கள் அமையும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்து முடிவுகள் எடுப்பது நல்லது.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் இருக்க கூடிய முக்கிய முடிவுகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். தேவையற்ற விஷயங்களில் மூக்கை நுழைப்பதை தவிர்க்கவும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு முன்னேற்றமான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் புதிய யுக்திகளை கையாளுவீர்கள்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கொள்கைகளை மீறி செயல்பட வாய்ப்புகள் உண்டு. எதிலும் நிதானத்துடன் இருப்பது நல்லது. கணவன் மனைவியிடையே ஒற்றுமைக்கு குறைவிருக்காது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு திடீர் எதிர்பாராத நன்மைகள் நடக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கத் துவங்கும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய துணிச்சலான முடிவுகள் மிகவும் நன்மை கொடுக்கக் கூடியதாக இருக்கும். முன் வைத்த காலை பின் வைக்க வேண்டாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பொறுமை தேவை. வார்த்தையில் இனிமை இல்லை என்றால் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வருமானம் பெருகும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். முன்பின் தெரியாதவர்களின் அறிமுகம் தவிர்த்துக் கொள்ளுங்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் பணிபுரிபவர்கள் குறுக்கு வழியில் செல்லாமல் இருப்பது நல்லது. தேவையற்ற வம்பு வழக்குகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மிகுந்த மகிழ்ச்சியை அனுபவிக்க வேண்டிய நல்ல நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தன லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் பணியில் கூடுதல் அக்கறையுடன் இருப்பது நல்லது. குடும்ப உறவுகளுக்கு இடையே விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிமையான நாளாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. வெளியிட பயணங்களின் பொழுது உடைமை மீது கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக பணியாளர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கடமையில் கூடுதல் அக்கறையுடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு தேவையில்லாத விரயம் ஏற்படலாம், வரவுக்கு மீறிய செலவு வரலாம் எனவே கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளால் பாராட்டும் வகையில் அமைப்பு உள்ளது என்பதால் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய மனதில் இருந்து வந்த குழப்பங்களுக்கு விடை கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சக போட்டியாளர்கள் எண்ணிக்கை வலுவாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்மறை எண்ணங்கள் மேலோங்கி காணப்படும் என்பதால் கூடுமானவரை அமைதி காப்பது நல்லது. ஆரோக்கியம் சீராகும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தேவையற்ற மன சஞ்சலங்களை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவி இடையே கருத்து மோதல் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதற்கும் வாய்ப்புகள் அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு மன அமைதி தேவை.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய பொருளாதார முன்னேற்றம் சிறப்பாக இருக்கும் என்பதால் வீட்டு தேவைகள் எளிதாக பூர்த்தி செய்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத நல்ல பலன் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீண்ட நாள் சந்திக்க வேண்டிய நபர் ஒருவரை சந்திக்க இருக்கிறீர்கள். உணவு கட்டுப்பாடு மேற்கொள்ளுங்கள்.