நாடளாவிய ரீதியில் இன்றைய தினமும் மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
விசாக பூரணை தினத்தை முன்னிட்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்றும் விசாக பூரணை தினத்தையொட்டி மின் துண்டிப்பு அமுல்படுத்தப்பட்டிருக்கவில்லை.
இதேவேளை, இன்றும் மதுபானசாலைகள் மூடப்பட்டிருக்கும் என மதுவரித்திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைய குறித்த தினங்களில் அனுமதிப்பத்திர விதிமுறைகளை மீறிச் செயல்படும் உரிமம் பெற்ற மதுபானசாலை உரிமையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.